தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு! - காவல்துறை விசாரணை

விருதுநகர்: மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த மினி லாரியின் மீது பின்னால் வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில், மினி லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Freight truck collides with mini truck parked on the roadside - Mini truck driver killed!
Freight truck collides with mini truck parked on the roadside - Mini truck driver killed!

By

Published : Aug 5, 2020, 4:30 AM IST

விருதுநகர் அருகே மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் (44) என்பவர், மினி லாரியில் டயர் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த போது, வாகனத்தின் டயர் வெடித்து சாலையோரம் நின்றுள்ளது.

இதனால் விஜயகுமார், மினி லாரியின் டயரை மாற்றி, புறப்படத் தயராகியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி லாரியின் ஓட்டுநர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சரக்கு லாரியின் ஓட்டுநர் ராஜன், உதவியாளர் சுப்ரமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த விஜயகுமார் என்பவர் மதுரை காவல் உதவி ஆய்வாளரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details