கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேளாண் சாகுபடி பணிகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில், உணவு உற்பத்தி குறைவதைத் தடுக்கும் வகையிலும் வேளாண் பணிகள் தடையின்றி நடக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாஃபே நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக அந்நிறுவனம் "J FARM " என்ற செல்ஃபோன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் இந்த இலவச உழவு சேவையை விவசாயிகள் பெற முடியும்.
இதுகுறித்து விருதுநகர் மக்கள் தொடர்பு பிரதிநிதி கிருஷ்ணகுமார் கூறுகையில், "இலவச உழவு திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் ஐந்து டிராக்டர்கள் மூலம் உழவுப் பணி தொடங்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உழவுப் பணி பாதிக்காத வண்ணம் விவசாயிகளுக்கு இலவசமாக அவர்களது நிலத்திற்கே சென்று உழவு மேற்கொண்டுவருகிறோம்.