விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(60). இவருடைய மகன் சேதுராஜ்(25), சாத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதற்கிடையில், சேதுராஜ் அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி (22) என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த முனீஸ்வரியின் கணவர் வீரபாண்டி, அவரது நண்பர்களான மருதுபாண்டி, அலெக்ஸ்பாண்டி, முனியராஜ், ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று (மே 18) இரவு சேதுராஜின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது தந்தை சீனிவாசனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.