விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு ஆய்வாளர் பானுமதி, காவல் துறை உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், சேத்தூர் நடுவகுளம் கண்மாய் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சிலர் கள்ளச்சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காவல் துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 4 பேர் கைது இதில் இரண்டு பேரை காவல் துறையினர் பிடித்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (42), பேச்சிமுத்து (50) என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் சகாதேவன், கஜேந்திரன் என்பது தெரிந்தது. இதனையடுத்து, காவல் துறை அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மற்ற இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பின்னர், ஆறுமுகமும் பேச்சிமுத்துவும் வைத்திருந்த 150 லிட்டர் சாராய ஊழலை காவல் துறையினர் பறிமுதல் செய்தவர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்பு: கண்டித்த காவலரைத் தாக்கி சிறைவைத்த 'குடி'மகன்கள்
!