விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி (Former Minister Rajendra Balaji).
தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் மாவட்ட காவல் குற்றப்பிரிவில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் (Aavin) கிளை மேலாளர் பதவி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.