அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், இத்தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். இதனிடையே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபின், செய்தியாளர்களை சந்தித்து கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வேட்புமனு தாக்கல்! - அருப்புக்கோட்டை தொகுதி
விருதுநகர்: முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளருமான கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
kkssr
அப்போது, ”இத்தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக, அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்றவன் நான். இந்த ஊரின் வளர்ச்சிக்கு நான் எல்லா திட்டங்களையும் செய்திருக்கிறேன். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை வீட்டுக்கு வீடு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்துவேன்” என்றார்.