தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் பார்வை - Former DMK ministers

விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவித்யா கல்லூரியில் பாதுகாப்பு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் திமுக அமைச்சர்கள்
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் திமுக அமைச்சர்கள்

By

Published : Apr 18, 2021, 11:15 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்துமுடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் காவலர்களின் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஏப். 17) திமுக முன்னாள் அமைச்சர்கள் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோர் ஸ்ரீவித்யா கல்லூரிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், காவல் துறையினரிடம் வாக்குப்பதிவு இயந்திரத்திரங்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு குறித்து விவரங்களைக் கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க: 'சீருடைப் பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு!'

ABOUT THE AUTHOR

...view details