தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு அந்நிய நாடுகள் அச்சப்படுகின்றன - அந்நிய நாடுகள் அச்சப்படுகின்றன

விருதுநகர்: இந்தியா பொருளாதார அளவில் பின் தங்கவில்லை என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு அந்நிய நாடுகள் அச்சப்படுகின்றன என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By

Published : Aug 22, 2019, 7:28 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கட்சத் தீவையை இலங்கைக்கு விற்றது திமுக, விற்க சொன்னது காங்கிரஸ் அரசு தான்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கையிடம் கொடுத்தது போல் காஷ்மீரையும் பாகிஸ்தானுக்கு திமுக கொடுக்கச் சொல்கிறது. இதற்கு காரணம், திமுகவினர் அந்நிய சக்திகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தியா பொருளாதார அளவில் பின் தங்கவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு அந்நிய நாடுகள் அச்சப்படுகின்றன என்றார்.

ABOUT THE AUTHOR

...view details