தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு! - நோட்டீஸ், விசாரணை, ஆய்வு

விருதுநகர் : சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு!

By

Published : Feb 26, 2021, 3:29 PM IST

சாத்தூர் அருகே கடந்த 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து தமிழ்நாடு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பியது.

இதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு விபத்துக்கான காரணங்கள், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள், விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆய்வு செய்து வருகிறது.

விசாரணை மற்றும் ஆய்வுகள் முடிந்த பிறகு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்காற்றி வருகிறது- பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details