விருதுநகர்:ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது, அய்யனார் கோயில். இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நீரோடை ஒன்று உள்ளது. மழை நேரங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இந்த ஓடையை கடந்து செல்வது மிக சிரமமான காரியமாகும்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அய்யனார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் நீரோடையில் குளிப்பதற்காகவும் சென்று இருந்தனர்.
மாலையில் மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோயில் நீரோடையில் வழக்கத்தை விட அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் பகுதி மற்றும் குளிப்பதற்காகச்சென்றவர்கள் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வர முடியாமல் தவித்தனர்.