விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று (பிப்.12) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி குத்தகைதரர்கள் சக்திவேல், சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், குத்தகைதாரர் பொண்ணுப்பாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி சாத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் விவரம்
- சாத்தூர்- மல்லிகா (55)
- படந்தால் - பஞ்சவர்ணம் (55)
- கீழ காந்திநகர்- பூமாரி (54)
- நடுச்சூரங்குடி- பாக்கியராஜ் (42)
- ஏழாயிரம்பண்ணை- தங்க லட்சுமி (40)
- மேலப்புதூர்- நேசமணி (32)
- நடுச்சூரங்குடி- கற்பகவல்லி (22)
- அன்பின் நகரம்- சந்தியா (20)