தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து - Fire in the Western Ghats

விருதுநகர்: மின்னல் இடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து

By

Published : Apr 17, 2020, 11:24 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இடி இடித்ததில் பேய்மலை மொட்டை என்ற பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென வனப்பகுதியில் பல்வேறு இடங்களுக்குப் பரவியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பிடித்த தீ ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அனைவரும் பார்க்கும் வகையில் பயங்கரமாக எரிந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து

இந்நிலையில் காட்டுக்குள் இருக்கும் வன விலங்குகள், மூலிகைச் செடிகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்கவும், தீயை அணைக்கவும் 20-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் மலைப்பகுதிக்கு விரைந்துசென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ரேப்பிட் சோதனைக் கருவிகள் சென்னை வரவில்லை!

ABOUT THE AUTHOR

...view details