விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே சேக் முகம்மது என்பவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் இன்று(அக்.13) திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ அடுத்தடுத்து இருக்கக்கூடிய கடைகளில் பரவியது.
அதனால் போலீசார் கடைகளில் உள்ள ஊழியர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருள்கள் தீயில் நாசமாகின. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மீன் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையில் தீ: ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்