தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ விபத்தை தடுக்க செயல் விளக்கப் பயிற்சி முகாம் - Virudhunagar fire service camp

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிகழும் தீ விபத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக செயல் விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Forest Protection at Virudhunagar
Fire Fighting camp at Virudhunagar

By

Published : Feb 12, 2020, 4:23 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, மான் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்துவருகின்றன.

அங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் ஏராளமான விலங்குகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் மலைப்பகுதியில் தீப்பிடிப்பதை கட்டுப்படுத்தவும், முன்னேற்பாடுகள் குறித்தும் செயல் விளக்கப் பயிற்சி முகாம் தாணிப்பாறையில் நடைபெற்றது.

தீ விபத்தைத் தடுக்க செயல் விளக்கப் பயிற்சி முகாம்

இந்த முகாமில், தீ பிடித்தால் எவ்வாறு அணைக்க வேண்டும், தீ பரவாமல் இருக்க என்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்புத்துறை, வனத்துறை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும் கருவி - கண்டுபிடித்த எலெக்ட்ரிசியன்

ABOUT THE AUTHOR

...view details