விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள போர்டு ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் பாலாஜி நகர்ப் பகுதியில், பழைய இரும்புக் கிடங்கு ஒன்றை வைத்துள்ளார்.
வழக்கம் போல பணி முடிந்து கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்ற நிலையில், திடீரென குடோன் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் உடனே சிவகாசி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னரே, அத்தீயை அணைத்தனர். மேலும் இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.