விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தின் மேல் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை செல்போன் கோபுரத்திலிருந்து புகை கிளம்பிய நிலையில் திடீரென மளமளவென தீ பற்றி எரிந்தது.
செல்போன் கோபுரம் தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், செல்போன் டவரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் செல்போன் டவர் முற்றிலுமாக எரிந்தது.