தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீ விபத்து; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 4 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By

Published : Mar 14, 2021, 8:51 AM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் (28) என்வருக்கு சொந்தமாக துர்கா கலர் மேச் பேக்டரி எனும் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலை உள்ளது.

நேற்று (மார்ச் 13) மாலை மத்தாப்பு காய வைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென தீப்பற்றியது. இதில் அங்கு வேலை பார்த்த வீராச்சாமி, புதுராஜன், நடராஜன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.

பஞ்சவர்ணம் என்ற பெண் தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மூவரும் 80 விழுக்காடு தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு, பேரிடர் மீட்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆமத்தூர் காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details