தமிழ்நாடு

tamil nadu

திமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

By

Published : Mar 2, 2020, 11:16 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே திமுக தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் தீயில் எரிந்து நாசமாகின.

fire-at-dmks-house-damage-worth-millions
fire-at-dmks-house-damage-worth-millions

விருதுநகர் மாவட்டம் ஞானசம்பந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், விருதுநகர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக உள்ளார். அப்பகுதியில் சொந்தமாக ஃபர்னிச்சர் கடை நடத்தி வரும் இவரது வீட்டில் இன்று மாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

மின்கசிவால் மளமளவென வீட்டின் கூரைப் பகுதி வரை தீப்பற்றியது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சாதன கருவிகள் வெடித்து சிதறின. விபத்து குறித்து தகவலறிந்த இராஜபாளையம் தீயணைப்புதுறையினர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் போன்ற பொருள்களும் முற்றிலும் எரிந்து நாசமானதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க:அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details