விருதுநகர்:விருதுநகர் அருகே திரவியநாதபுரத்தில் அம்பிகா காபி தூள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஒரு பகுதியில் சிக்கரி காபி தூள் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் திடீரென இன்று அதிகாலை 4 மணி அளவில் தீ பற்றியுள்ளது.
தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் . இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிக்கரி காபி தூள் எரிந்து நாசமாகின.