விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காய்கறிச்சந்தையின் பின்புறம் ரமேஷ் என்பவர் பழைய இரும்புக்கடை நடத்திவருகிறார். அந்த இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த சந்தைக்குப் பரவியது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக அண்ணா காய்கறிச்சந்தை சிவகாசியில் இரண்டு இடங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இதில் சந்தையில் இருந்த ஒரு கடை, இரும்புக் கடை முழுவதும் எரிந்து சேதமாகின.
சந்தையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அறிவிப்பின்றி தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்!