தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் ஆலையில் தீ விபத்து! - சிவகாசு பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் ஆலையில் தீ விபத்து

விருதுநகர்: சிவகாசி வடக்கு வள்ளலார் தெருவில் உள்ள பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் ஆலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

fire accident in sivakasi crackers factory

By

Published : Aug 28, 2019, 7:12 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விஜய கண்ணன் என்பவர், கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை வைத்து பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு, வெடி உப்பில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஆலையில் தீ பற்றத்தொடங்கியது.

இந்த தீ சிறிது நேரத்தில் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலைக்கு அருகில் இருந்த பொதுமக்கள் சிவகாசி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

இருந்தாலும் தீ கட்டுக்குள் வராததையடுத்து விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், ஆலையில் விதிமுறைகளை மீறி வைத்திருந்த அலுமினியம், மக்னீசியம், சல்பேட், போன்ற பொருட்களால் தீயை அணைக்க முடியவில்லை.

நிலைமையை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள், மூலப்பொருட்களின் தன்மையை இழக்கச் செய்வதற்காக மணல் மூட்டைகளை கொண்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிக்குள் முறையான அனுமதி இல்லாமல் இயங்கும் இதுபோன்ற தொழிற்சாலைகளை அரசு அலுவலர்கள் கண்டு கொள்வது இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details