தமிழ்நாடு

tamil nadu

தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து!

By

Published : May 9, 2020, 1:38 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயங்கிவந்த தனியார் பஞ்சு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாயின.

தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து
தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி பகுதியில் தங்க அய்யனார் பஞ்சு ஆலை செயல்பட்டுவருகிறது.

இந்த ஆலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தன.

பின்னர், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வுசெய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து

முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இந்த ஆலையின் மற்றொரு பஞ்சு ஆலை கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகத்தை தீவிரப்படுத்திய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய காவல் ஆய்வாளர்

ABOUT THE AUTHOR

...view details