தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு - sivakasi cracker factory

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து  வெடி விபத்து  சிவகாசி வெடி விபத்து  பட்டாசு ஆலையில் வெடி விபத்து  விருதுநகர் செய்திகள்  fire accident  fire accident in a cracker factory  cracker factory  sivakasi cracker factory  sivakasi cracker factory fire accident
தீ விபத்து

By

Published : Sep 20, 2021, 9:52 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே சரஸ்வதிபாளையம் பகுதியில் கோடீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில், ரோல் கேப் ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இப்பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப்.20) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சின்ன பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ன முனியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முனியப்பன் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாயமான மாணவி மாலையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

ABOUT THE AUTHOR

...view details