விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமான காளீஸ்வரி கலர் மேட்ச் வொர்க்ஸ் என்ற கலர் மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கலர் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.26) கலர் மத்தாப்பு கழிவுப்பொருள்களை தொழிற்சாலையின் வெளி வளாக மைதானத்தில் குவித்து வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தீ வேகமாக பரவியது. இதில் காளிதாஸ் (35), அர்ஜூன் (26) என இரண்டு தொழிலாளர்களுக்கு லேசான தீ காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.