விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பெரியார் நகர் வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குச்சாவடி மைய எண் 258ல் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி (PINK POLING BOOTH) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையம் தனி சிறப்பு வாய்ந்த மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடிய வாக்குப்பதிவு மையமாக உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் மொத்தம் 650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடி மையம் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில், இளம்பெண்கள், புதிய பெண் வாக்காளர்கள் என ஆர்வமுடன் இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர்.