விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிள்ளையார்(55), இவரது மகன் மாரியப்பன்(35). இருவரும் கோட்டைபட்டியில் உள்ள வைப்பாற்று பகுதிக்கு அனுமதியின்றி அள்ளுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. வைப்பாற்று பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து மணலை எடுத்து குவித்து வைத்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பள்ளத்தின் மேற்பரப்பில் இருந்த மணல் சரிந்து விழுந்து இருவரும் மணலில் உயிரோடு புதைந்தனர்.
ஆற்றில் மணல் சரிந்து தந்தை,மகன் பலி! - மணல் சரிந்து விழுந்து தந்தை,மகன் பலி
விருதுநகர்:சாத்தூர் அருகே வைப்பாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது மணல் சரிந்து தந்தை, மகன் உயிரிழப்பு.

vaipparu-river
ஆற்றில் மணல் சரிந்து தந்தை,மகன் பலி
பின்னர், ஆருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து, இருவரின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.