தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்துவந்த தந்தை, அண்ணன் கைது - இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

விருதுநகர்: வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்த தந்தை, அண்ணன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்துவந்த தந்தை, அண்ணன் கைது
வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்துவந்த தந்தை, அண்ணன் கைது

By

Published : Sep 3, 2020, 7:27 AM IST

Updated : Sep 3, 2020, 10:39 AM IST

விருதுநகர் அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த வழி உறவினர் மகளைத் தத்தெடுத்து வளர்த்துவந்துள்ளனர். தான் தத்தெடுத்து வளர்த்துவந்த 11 வயது மகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ப்பு அப்பாவான 54 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துவந்த நிலையில், அவரின் அண்ணன் மகனும் ஒரு வருடங்களுக்கு மேலாக 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். நீண்ட நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அந்தச் சிறுமியிடம் தாய் விசாரணை செய்தபோது, தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து சிறுமியின் வளர்ப்பு தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தை, அவரது அண்ணன் மகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து விருதுநகர் மகளிர் காவல் நிலைய காவலர் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கைதான சிறுமியின் வளர்ப்பு தந்தை விருதுநகரில் இரும்புக்கடை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 3, 2020, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details