விருதுநகர் மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு பயிரிட்ட மக்காச்சோளம் படைப்புழு தாக்கம் மற்றும் அதிக மழையால் பாதிப்படைந்தது. இந்தச் சேதத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
மழையால் சேதமான மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கோரி மனு - Maize crop damage
விருதுநகர்: படைப்புழு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
விவசாயிகள்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:மலிவான விலையில் நஞ்சில்லா காய்கறிகள்; விவசாயிகளுக்கு விடியலைத் தந்த 'நம் சந்தை'