தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை! - Government Paddy Procurement Station

விருதுநகர்: ராஜபாளையம் புதுகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஜபாளையம் புதுகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
ராஜபாளையம் புதுகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

By

Published : Feb 4, 2021, 8:53 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சேத்தூர், தேவதானம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வயல்களில் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகி நாசமானது.

ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து வரும் நிலையில், அறுவடை செய்யக் கூடிய நெற்பயிர்களை அடிப்பதற்கு களமும், அரசு கொள்முதல் நிலையம் இல்லாததாலும், சாலை ஓரங்களில் நெல் பயிர்களை போட்டு அடித்து மூட்டைகளாக பிரித்து வைத்து, அவற்றை பாதுகாக்க வழியில்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

சாலை ஓரங்களில் நெற்பயிர்களை போட்டு அடித்து மூட்டைகளாக பிரித்து வைக்கும் விவசாயிகள்

ராஜபாளையம் அருகே உள்ள புதுக்குளம் பாத்தியப்பட்ட 360 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் நெல்களை சாலை ஓரமாக மூட்டைக்கட்டி வைத்து தனியார் வியாபாரிகளிடம் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலை உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு 1300 ரூபாய் விலை கிடைக்கும். ஆனால் அரசு கொள்முதல் செய்யாததால் 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பகுதி விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கோழிக்கொண்டை பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details