கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மனு - விருதுநகர் செய்திகள்
விருதுநகர்: கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட பி.பரைபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி அமைய உள்ளது. இதில், கண்மாய், கிணறு, கோயில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்குவாரி அமைய உள்ள பகுதியின் அருகே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது.
எனவே இப்பகுதியில் கல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
144 தடை உத்தரவின் போது 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் விவசாயிகள் - காவலர்களுக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.