விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 3000 ஏக்கருக்கு அதிகமாக சப்பட்டை மாங்காய், கிளிமூக்கு மாங்காய், பஞ்சவர்ணம் மாங்காய், உருட்டு மாங்காய் விவசாயம் செய்யப்படுகிறது.
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாங்காய் மரங்களில் புழுக்கள் தோன்றி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் மரங்களுக்கு 6 வகையான மருந்துகள் அடித்தும் எந்தப் பயனில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இருப்பினும் விளைச்சல் அடைந்த 20 விழுக்காடு மாங்காயைப் பறிப்பதற்கு கரோனா பாதிப்பால் போக்குவரத்து வசதி இல்லாததால் வேலையாள்கள் வருவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
மாங்காய் சந்தைகளை ஏற்படுத்தி தர வேண்டும் தாங்களே மாங்காய்களைப் பறித்து சந்தைக்குச் சென்றாலும் பொதுமக்கள் அதிகம் வெளியே வராததால் விற்பனையாகவில்லை என்று கூறிய அவர்கள், ஆகவே அரசு மா விவசாயிகளுக்கு சந்தைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் அல்லது மாங்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்துதர வேண்டும் என அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - வாழ்வாதாரமின்றி வாடும் வெள்ளரிக்காய் விவசாயிகள்