விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). முன்னாள் ஊர் நாட்டாமையான இவர், நேற்று மாலை தேசிகாபுரத்திலிருந்து முறம்புப் பகுதிக்கு தேநீர் குடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர், இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, தேசிகாபுரம் சாலையில் கும்பலாக வந்த சிலர் வழிமறித்து கீழேத் தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.