விருதுநகர்:ராஜபாளையம் அருகேவுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் நீர்தேக்கம் அணையானது பருவமழை காரணமாக முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், இன்று (நவ.22) விவசாய பயன்பாட்டிற்க்காக அனையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சிகள் முடிந்து மாவட்ட ஆட்சியர் திரும்பும் போது, தேவதானம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆட்சியரின் காரின் முன்பு தற்கொலைக்கு முயன்றனர்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், கணேஷ்குமாரின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு அவரை பிடித்தனர்.
கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்பி
பின்னர், காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து விசாரித்தார். அப்போது, தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை ஒட்டி தென்காசி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் நிலம் உள்ளது.