சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், இன்று (ஏப். 15) மற்றொரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின், அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில், இன்று (ஏப். 15) வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜ் என்பவருக்கு சொந்தமான இந்தப் பட்டாசு ஆலை, வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது.
மருந்துகள் உராய்வால் வெடி விபத்து
அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்துகள் செலுத்தும்போது, உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தால், அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆனையூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி (25) என்ற பெண் படுகாயமடைந்தார்.