தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்டைய மகளிர் பயன்படுத்திய அணிகலன்கள் கண்காட்சி தொடக்கம் - Exhibition of old age women Ornaments in viruthunagar

விருதுநகர்: அரசு அருங்காட்சியகத்தில் பண்டைய மகளிர் பயன்படுத்திய அணிகலன்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றுவருகிறது.

Exhibition of old age Ornaments in viruthunagar
Exhibition of old age Ornaments in viruthunagar

By

Published : Feb 5, 2020, 10:03 AM IST

பண்டைய காலத்தில் உடலில் நகைகள் அணிவது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவானதாகவே இருந்தது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 'கீழடி முதல் கிபி வரை பண்டைய மகளிர் அணிகலன்கள்' என்ற தலைப்பில் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றுவருகிறது. நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் கீழடியில் தொல்பொருள் துறையினரால் வெளிக்கொண்டுவரப்பட்ட சங்ககால மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக பெண்கள் உடலின் மேல் பகுதியில் தங்க ஆபரணங்கள், கீழ் பகுதியில் வெள்ளி ஆபரணங்கள் அணிவர். உச்சி முதல் பாதம் வரை அணியக்கூடிய நெத்திச்சூடி, கம்மல், மூக்குத்தி, சங்கிலி, வளையல், கொலுசு, தந்தத்தாலான ஆபரணங்கள் என பலவகையான மெட்டிகள் ஒட்டியானம், 1892ஆம் ஆண்டைச் சேர்ந்த பதக்க மாலை ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

அணிகலன்களின் கண்காட்சி

இன்றைய தலைமுறையினர் அணிகலன்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்தக் கண்காட்சியானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிகலன்கள் கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details