தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பரப்புரை செய்ய வேண்டும் - கே.டி.ராஜேந்திர பாலாஜி - பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பரப்புரை செய்ய வேண்டும் - கே.டி.ராஜேந்திர பாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பேசினார்.

பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் - கே.டி.ராஜேந்திர பாலாஜி
பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் - கே.டி.ராஜேந்திர பாலாஜி

By

Published : Feb 11, 2022, 9:38 AM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.

அதில் பேசிய அவர், 'ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியைக் கைப்பற்ற வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அனைத்து கருத்துக்கணிப்பிலும் அதிமுக வெற்றி பெறும் எனத் தகவல் வருகிறது.

33 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கலை அறிவியல் கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அனைத்துப் பகுதிக்கும் கூட்டுக்குடிநீர் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான்.

வெற்றிபெற்ற நகராட்சிப் பட்டியலில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருக்கிறது. அதிமுக ஆட்சியை தை 1 முதல் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுகவின் கோட்டை. பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பரப்புரை செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.ஆண்டாள் அவதரித்த ஆன்மிக பூமி ஸ்ரீவில்லிபுத்தூர். அதிமுகவிற்கு அருமையான அற்புதமான எதிர்காலம் உள்ளது.

அதிமுக எப்போதும் ஆளும் கட்சியாக செயல்படும் கட்சி' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தலைக்கு தில்ல பார்த்தீயா..!' - பாஜக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details