தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை: 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை... - Rajendra Balaji case investigation

அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர் மோசடி வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்குப் பதில் அளித்து உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை, ராஜேந்திர பாலாஜியிடம் 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை
ராஜேந்திர பாலாஜியிடம் 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை, ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

By

Published : Feb 14, 2022, 7:33 AM IST

விருதுநகர்: ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஜனவரி 5ஆம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. இதனால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜி ஜனவரி 13ஆம் தேதி வெளியே வந்தார்.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,தன்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார்.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

அதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜனவரி 31ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். அப்போது நேரில் ஆஜரான ராஜேந்திர பாலாஜி, தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அப்போது கூறினார்.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

மறுப்பரிசோதனை அறிக்கையில் கரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், பிப். 10ஆம் தேதி சம்மன் அனுப்பினர்.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜி நேற்று (பிப். 13) காலை நேரில் ஆஜரானார். அங்கு அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை

மேலும், அவரிடம் மோசடி வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்குப் பதில் அளித்து உள்ளார். மேலும், மோசடி வழக்கின் ஆவணங்கள் குறித்தும், ஆதாரங்கள் குறித்தும் காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் மம்தா உரையாடல்: விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details