தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வேளாண் நிலத்தை ஆய்வுசெய்த எம்.பி.! - virudhunagar district news

விருதுநகர்: ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தி எதிரொலியாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான வேளாண் நிலத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார்.

விவசாய நிலங்களை ஆய்வு செய்த எம்.பி.
விவசாய நிலங்களை ஆய்வு செய்த எம்.பி.

By

Published : Nov 23, 2020, 5:10 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 56,370 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியிலுள்ள வேளாண் நிலம் பெரும்பாலும் மானாவாரி நிலமாக உள்ளது.

இங்கு மழையை நம்பியே வேளாண்மை செய்துவரும் நிலையில், இந்த ஆண்டு நல்ல மழை இருந்தும் வேளாண் பயிர்களான மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

விவசாய நிலத்தை ஆய்வுசெய்த எம்.பி.

இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்தில் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக இன்று (நவ.23) விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் படைப்புழுத் தாக்குதலால் சேதமான மக்காச்சோளப் பயிர்களை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வுசெய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் விளைவித்த விவசாயிகளின் நிலை மிக மிக கொடுமையாக மாறியுள்ளது.

ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவு செய்து பச்சைப்பசேலென விளைந்துள்ள மக்காச்சோளப் பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது. மழை பெய்தும் விவசாயிகளின் வாழ்வில் விடிவுகாலம் வரவில்லை. ஆனால் அதைக் கவனிக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் உள்ளனர். மேலும் இவர்கள் விவசாயிகளின் வாழ்வை அதானியிடமும் அம்பானியிடமும் அடகுவைக்கும் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றனர்.

ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். கடந்த ஆண்டு அலுவலர்கள் அனைத்து இடங்களிலும் ஆய்வுசெய்யாமல் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஆய்வுசெய்தனர். இதனால் பாதி இழப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி நானும் ஒரு விவசாயி எனக் கூறுவது வெறும் வசனமாக மட்டுமே இருக்கிறது. விருதுநகருக்கு வருகைதந்த முதலமைச்சர் இந்தப் பாதிப்புகளைப் பற்றி ஆராயவில்லை" என்றார்.

இதையும் படிங்க: படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மக்காச்சோளம்; ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வீண்!

ABOUT THE AUTHOR

...view details