விருதுநகர்:சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரத்தில், சபாநாயகரை கண்டிக்கும் விதமான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று (அக்.19) போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களை ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
இவ்வாறு ஈபிஎஸ் கைதானதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.