தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவில் வேலைவாய்ப்பு! - Assistant Data Entry Operator

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவு ஆனது Assistant Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு

By

Published : Oct 25, 2022, 4:43 PM IST

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Data Entry Operator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடமாக நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.11,916 மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 வஉசி நகர், சூலக்கரை மேடு, விருதுநகர் 626003 என்ற முகவரிக்கு 29.10.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details