விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ராஜபாளையம் ஊராட்சி பகுதிகளில் மைக்ரோ நிதி நிறுவனத்தினர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், சிறிய தொழில் செய்பவர்களுக்கும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து வசூல் செய்து வருகின்றனர்.
இதில் சிலர் கரோனா காலத்தில் பணம் கட்ட கால கெடு கொடுத்த நிலையில் தற்போது கடன் வாங்கியவர்கள் திருப்பி கட்டி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருந்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருபவர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன். இவரது மனைவி கலாவதி. இவர்கள், எல் & டி மைக்ரோ நிதி நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
சிறுமியின் மீது சுடும் பாலை ஊற்றிய ஊழியர்கள்:
வாரந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தவணை கட்ட முடியவில்லை. இதனால், நேற்று முன்தினம் (ஜன.04) ஆயிரத்து 950 ரூபாய் தவணைக்கு, ஆயிரத்து 300 ரூபாய் கட்டியுள்ளனர். மீதி பணம் 650 ரூபாயை நேற்று (ஜன.05) கொடுத்துள்ளனர்.
அப்போது ஜனவரி மாத தவணையும் கட்ட வேண்டும் என நிதி நிறுவன ஊழியர்கள் கூறியதால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டீ கடையில் இருந்த சுடும் பாலை எடுத்து தம்பதியின் கண் முன்னே அவர்களது மகள் மீது ஊற்றியுள்ளனர்.