தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராஜபாளையத்தில் சூடு பிடித்த தேர்தல் - இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பிரச்சாரம் - அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: இராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இருசக்கர வாகனத்தில்  சென்று அமைச்சர் பிராச்சாரம்
இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பிராச்சாரம்

By

Published : Mar 22, 2021, 7:43 AM IST

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரகாலமாக இராஜபாளையம் பகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனடிப்படையில், நேற்று (மார்ச்.22) ஒவ்வொரு பகுதியாக சென்று சமுதாயத் தலைவர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு பட்டார்.

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பிராச்சாரம்
மேலும், தன் இருசக்கர வாகனத்தில் ஏறி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ’’இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைந்திட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவசங்களும் நல்ல திட்டங்களும் உங்களுக்கு வந்து சேர்ந்தடைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ABOUT THE AUTHOR

...view details