விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சம்பங்கி தெருவைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (75). இவர் அச்சம்பட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.
இது குறித்து, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்திவந்தனர். விசாரணையில், சாமிக்கண்ணு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், பதுக்கிவைத்திருந்திருந்த சுமார் 10 கிலோ 250 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.