தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெருவில் செல்பவர்களைத் துரத்தி துரத்தி கடிக்கும் வெறிநாய் - அச்சத்தில் மக்கள்! - தெருவில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கும் வெறிநாய்

ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய் வெறிப்பிடித்து கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் காயமடைந்தனர். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி பல ஆண்டுகளாக அளிக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தெருவில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கும் வெறிநாய்
தெருவில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கும் வெறிநாய்

By

Published : Feb 5, 2022, 6:32 PM IST

விருதுநகர்:ராஜபாளையம் பகுதியில் பலர் வளர்ப்புப் பிராணிகளாக நாய்கள் வளர்க்கின்றனர். சிலர் சரியான கண்காணிப்பு இல்லாமல் நாய்களைத் தெருக்களில் சுற்றவிடுகின்றனர்.

தற்போது நகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுவதுடன், வாகன ஓட்டிகள் நாய்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 4) ராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டிவிரட்டி கடிக்கத் தொடங்கியது.

இந்த வெறிநாய் கடியில் ஒரே குடும்பத்தில் தாய் மகன் உள்பட எட்டு பேர் காயமடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ”ராஜபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாகத் தடுப்பூசி செலுத்த எவ்வித நடவடிக்கை எடுக்காததால், தெரு நாய்கள் வெறி பிடித்து மக்களைக் கடித்துவருகின்றது” எனத் தெரிவித்தனர்.

மேலும் சில நாய்கள் நோய் ஏற்பட்டு நோய் பரப்பும்விதமாகச் சுற்றிவருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதா ரிப்பீட்டு - விரைவில் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details