தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசே தரலாம்!' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

விருதுநகர்: ஊழல் செய்வதில் நோபல் பரிசே பெறும் அளவிற்கு, உலகளவில் எடப்பாடி பழனிசாமியை மிஞ்ச யாருமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

cpm
cpm

By

Published : Mar 23, 2021, 6:01 PM IST

Updated : Mar 23, 2021, 6:48 PM IST

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மத்திய மாநில அரசுகள் தமிழகத்தையும் இந்தியாவையும் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டன. அவற்றை சரி செய்யவே தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடுகிறோம். பிஜேபிக்கு காவடி தூக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தன்னை மறைந்த ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னால் ஏற்க முடியுமா? பச்சைத் தூண்டு போட்டால் மட்டும் விவசாயி ஆகிவிட முடியாது. மத்திய அரசின் மூன்று சட்டங்களை ஆதரித்து மிகப்பெரிய துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசே தரலாம்!

தமிழகம் எந்தத்துறையில் வெற்றி நடை போடுகிறது. எல்லாத் தொழிலையும், வளங்களையும் அழித்து விட்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டுமே வெற்றிநடைபோடுகிறது. ஊழல் செய்வதில் நோபல் பரிசே பெறும் அளவிற்கு, உலகளவில் எடப்பாடி பழனிசாமியை மிஞ்ச யாருமில்லை. அதிமுக ஆட்சியால் 100 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது” என்றார்.

இதையும் படிங்க: காய்கறி விற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்!

Last Updated : Mar 23, 2021, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details