விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி சேவகமூர்த்தி என்பவர், மது அருந்திவிட்டு, போதையில் சுற்றித்திரிந்தார். இவர் முன்பகை காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த வண்ணக்கிளி என்ற இளம் பெண்ணை உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மதுபோதையில் தாக்குதல் - இளம்பெண் உயிரிழப்பு! - Woman killed for vengeance
விருதுநகர்: முன்பகையில் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மது போதையில் இளம்பெண் மீது உருக்கட்டை தாக்குதல்!
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வண்ணக்கிளியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி வண்ணக்கிளி இன்று உயிரிழந்தார். இது குறித்து கூமாப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சேவகமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பால் பாக்கெட் திருடிய பாய்ஸ்: சிசிடிவி மூலம் சிக்கினர்!