விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான, அனத்தலை பகுதியில் நேற்று (25.07.20) இரவு நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துகொண்ட கலங்கபெரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தியாகராஜன், சிவலிங்கம் ஆகிய மூவரும் மாருதி 800 காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் தியாகராஜன், சிவலிங்கம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.