தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போதை அது சாவின் பாதை' - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி - கள்ளச்சாராயம் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

விருதுநகர்: மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பேரணி
மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பேரணி

By

Published : Jan 29, 2020, 9:21 AM IST

விருதுநகரில் மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், கள்ளச்சாராயத்தை குடிக்காதீர், போதை அது சாவின் பாதை, கடனாளி ஆக்கிவிடும் குடிபோதை, சிகரெட் வேண்டாம் போன்ற விழிப்புணர்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி

இந்தப் பேரணி விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் தொடங்கி தெப்பக்குளம், மெயின் பஜார், மாரியம்மன் கோயில் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

ABOUT THE AUTHOR

...view details