தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் குடிநீர் பிரச்னை: நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை - Municipal office blockade

விருதுநகர்: சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தரக்கோரி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

By

Published : Mar 21, 2020, 12:17 PM IST

விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட ஔவையார் தெருவில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சென்ற இரு நாள்களாக, இப்பகுதியில் பொது குழாய் சேதமடைந்த காரணத்தினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் தண்ணீர் லாரி, குடிநீருக்கு அதிக அளவு பணம் வசூலிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

எனவே சேதமடைந்த பொதுக் குழாயை சரி செய்து தரவேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், நகராட்சி ஆணையர் குடிநீர் பிரச்னையை சரி செய்து தரப்படும் என ஒப்புதல் அளித்த பின்னரே, பெண்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை

ABOUT THE AUTHOR

...view details