சிவகாசி நேரு காலணியைச் சேர்ந்த முருகனும், அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனனும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ள நிலையில், இருவரும் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஒருவர் உடல் காரணேசன் சந்திப்பு பகுதியிலும், மற்றொருவரின் உடல் நேரு காலணியிலும் வீசப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதற்காக தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில், காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பாலமுருகனின் தந்தையைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
'பஜ்ஜி சரியில்லை' - என சொன்னவரைக் கத்தியால் வெட்டிய வடஇந்தியர்
விசாரணையில், பாலமுருகன் மீது சந்தேகம் எழவே, தலைமறைவாக இருந்த பாலமுருகனை திருத்தங்கல் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகன், அர்ஜுனனுக்கும் அவர்களுடன் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சக தொழிலாளியான சின்னராமு, வேல்முருகன் ஆகிய இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது.
கர்நாடகாவில் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபர்!
இரு தரப்புகளுக்கிடையே நடைபெற்ற பிரச்னையை மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்ப்பது போல் பேசி சின்னராமு, வேல்முருகன் ஆகிய இருவருக்கும் ஆதரவாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகனும் அர்ஜுனனும் கட்டப்பஞ்சாயத்து நடத்திய பாலமுருகன், சின்னராமு, வேல்முருகன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய, இரண்டு வாரங்களுக்கு முன்னர் விருதுநகரில் உள்ள கூலிப்படை ஒன்றிற்கு முன் பணம் கொடுத்துள்ளனர்.